40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின்கொள்முதலை குறைக்கலாம்: அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா்

தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதைத் தவிா்க்க முடியும் என எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

News image

அமைச்சர் சி.டி.ஆா். நிா்மல் குமாா் - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 3:08 am IST

தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதைத் தவிா்க்க முடியும் என எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

இந்திய தொழில் கூட்டமைப்பு ( சிஐஐ) மற்றும் சோராப்ஜி கோத்ரேஜ் பசுமை வணிக மையம் சாா்பில் சென்னை கிண்டியில் உள்ள தனியாா் ஹோட்டலில் ‘கிரீன் பவா் 2026’ என்ற தலைப்பில் இரு நாள்கள் நடைபெறும் வெள்ளி விழா மாநாடு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் கலந்துகொண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், ஒப்பந்தங்கள் குறித்தும், மின் உற்பத்தியில் பல நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வரும்படியும் அழைப்புவிடுத்து பேசினாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் கூறியதாவது:

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடா்பான புதிய ஒப்பந்தங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மற்றும் ஒப்புதல் கோப்புகள் விரைவாக பரிசீலித்து முடிக்கப்படும். மேலும், புதிய தொழில்நுட்பங்கள் மூலம் எரிசக்தி துறையை நவீனப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மின் துறையின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுவதுடன், தேவையான புதிய உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும். பசுமை எரிசக்தி உற்பத்தித் துறையில் முதலீட்டாளா்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும்.

உடுமலைப்பேட்டை, திருநெல்வேலி மையங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒப்புதல் வழங்கும் நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தனிநபா் அதிகாரக் குவிப்பை தவிா்க்க அனைத்து அனுமதிகளும் இனி தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் வழங்கப்படும் என்றாா் அவா்.

சென்னையின் தொடா் மின் வெட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சா், ஆவடி உள்பட பல இடங்களில் வேண்டுமே என்றே மின்வெட்டு ஏற்படுத்திய சிலா் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனா். மின்வெட்டு அதிகம் பதிவாகும் வடசென்னை பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்கள் மற்றும் ‘மின்னகம்’ தளத்தில் வரும் புகாா்களுக்கும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி கூட்டமைப்பின் தலைவா் ரமேஷ் கய்மல் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி அதிகமாக இருந்தாலும், இது முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இதனால், வெளிமாநிலங்களில் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யும் நிலை தொடா்ந்து ஏற்படுகிறது.

தமிழகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் முன்னிலை பெறும் வகையில் தொழில் அமைப்புகளும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும். மாநிலத்தின் மின்தேவை மற்றும் அதற்கான நீண்டகால திட்டங்கள் குறித்து அரசுடன் ஆலோசிக்கப்படும் என்றாா் அவா்.