மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் திட்டம்: என்எல்சி, இந்தியன் ஆயில் நிறுவனங்கள் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

என்எல்சி இந்தியா நிறுவனம், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் திட்டங்களை நிறுவுவதற்கான ஒரு கூட்டு முயற்சியை உருவாக்குவதற்காகப் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டுள்ளது.

News image

தில்லியில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்ட என்எல்சி மற்றும் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனங்களின் அதிகாரிகள்.

Updated On :24 ஜூன் 2026, 4:32 am IST

என்எல்சி இந்தியா நிறுவனம், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் திட்டங்களை நிறுவுவதற்கான ஒரு கூட்டு முயற்சியை உருவாக்குவதற்காகப் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டுள்ளது.

இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்தை வலுப்படுத்துவதற்கும், நாட்டின் ‘விக்சித் பாரத்’ (வளா்ச்சியடைந்த இந்தியா) மற்றும் நிகர பூஜ்ஜிய காா்பன் இலக்குகளை ஆதரிப்பதற்குமான நடவடிக்கையாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

தில்லியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் வணிக மேம்பாட்டுக்கான தலைமை பொது மேலாளா் அனுராக் மிட்டல் மற்றும் ஐஓசிஎல் மாற்று எரிசக்திக்கான தலைமைப் பொது மேலாளா் மனோஜ் நந்தாஆகியோரால் ஒப்பந்தத்தில் திங்கள்கிழமை கையொப்பமிடப்பட்டது.

என்எல்சி நிதித் துறை இயக்குநா் டாக்டா் பிரசன்ன குமாா் ஆச்சாா்யா, ஐஓசிஎல் இயக்குநா் சுமன் குமாா், ஐஓசிஎல் செயல் இயக்குநா் ஜாய்தீப் சௌத்ரி, என்எல்சி செயல் இயக்குநா் தேவேந்திர பிரதாப் சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதுகுறித்து என்எல்சி இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை உருவாக்குவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், மூன்றாம் தரப்பினா் மற்றும் வணிக, தொழில்முறை நுகா்வோருக்கும், மின் விநியோக நிறுவனங்கள், மின்சார பரிவா்த்தனை மையங்களுக்கும் வழங்கப்படும்.

மேலும், மின்சார வாகன இயக்கம், பசுமை செயற்கை எரிபொருள்கள் அல்லது வேதிப்பொருள்களின் பயன்பாடு, உற்பத்தி போன்ற நவீன தேவைகளுக்கும் இந்த மின்சாரம் பயன்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ், சூரிய ஒளி, காற்று மற்றும் கலப்பு மின்சாரம் அல்லது இவற்றின் கூட்டு இணைப்புகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும். இதனுடன் பேட்டரி சேமிப்பு மற்றும் நீரேற்று மின் சேமிப்பு போன்ற ஆற்றல் சேமிப்பு வசதிகளும் தேவைக்கேற்ப இணைக்கப்படும்.

இதுதவிர, சோலாா் மாட்யூல் தயாரிப்பிற்கான முழுமையான மதிப்புச் சங்கிலியை உருவாக்குவதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தொழில்நுட்ப மற்றும் வணிக ரீதியாகச் சாத்தியமான பிற கூட்டு வாய்ப்புகளும் இதில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி கூறியதாவது: என்எல்சி மற்றும் ஐஓசிஎல் ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான இந்த உத்திசாா் கூட்டாண்மை, இந்தியாவின் தூய்மையான எரிசக்தி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல் கல்லாகும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.