செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

தவெகவை ஆதரிக்காமல் இருந்திருந்தால் பதவியேற்பு விழாவே நடந்திருக்காது! பெ. சண்முகம்

தவெகவுக்கு ஆதரவளித்தது குறித்து பெ. சண்முகம் விளக்கம்...

News image

பெ. சண்முகம் - Shanmugam P

Updated On :23 ஜூன் 2026, 3:00 pm IST

தவெகவை நாங்கள் ஆதரிக்காமல் இருந்திருந்தால் மே 10 ஆம் தேதி பதவியேற்பு விழாவே நடந்திருக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் தயவில் தவெக ஆட்சி அமைத்ததாக எழுந்த விமர்சனத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜோசப் விஜய், தவெகவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக தாங்களே முடிவெடுத்ததாக இடதுசாரி கட்சிகள் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பெ. சண்முகம், தவெகவுக்கு ஆதரவு அளித்தது தொடர்பாக மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

”நாங்கள் குறிப்பிட்ட நோக்கத்துக்காகதான் ஆதரவளித்தோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைத்தோம்.

ஒருவேளை மே 8, 9 தேதிகளில் இருந்த சூழலில் நாங்கள் ஆதரவு கொடுக்காமல் போயிருந்தால் மே 10 ஆம் தேதி பதவியேற்பு விழாவே நடந்திருக்காது. அதன்பின்னர், எப்போது வேண்டுமானாலும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்திருக்கும்.

தமிழ்நாட்டில் பாஜக காலூன்றக் கூடாது என்பதற்காகதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒற்றக் கருத்துடைய கட்சிகளுக்கு ஆதரவளித்து வருகின்றது. அப்படியிருக்கும் சூழலில், பின்வாசல் வழியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்க முடியாது. அதனை தடுக்கும் நோக்கில் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்தோம். இது எங்களுடைய நிலைப்பாடு” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Had they not supported TVK, the swearing-in ceremony itself would not have taken place! – P. Shanmugam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.