ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

சிதம்பரம் நந்தனார் மடத்தில் காந்தி மன்றத்தினர் வழிபாடு மற்றும் தியானம்!

சிதம்பரம் நந்தனார் மடத்தில் காந்தி மன்றத்தினர் வழிபாடு மற்றும் தியானம் மேற்கொண்டனர்.

காந்தி மன்றத்தினர் - DPS

Published On :26 ஜூன் 2026, 10:50 am IST

சிதம்பரம்: சிதம்பரம் நந்தனார் மடத்திற்கு தில்லி. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த காந்தி மன்றத்தினர் வழிபாடு செய்து தியானம் மேற்கொண்டனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரம், ஓமகுளம் பகுதியில் உள்ள நந்தனார் மட வளாகத்தில் நந்தனார் கோவில் உள்ளது.

இந்த கோயிலை கடந்த 1927 ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மகாத்மா காந்தியடிகள் அடிக்கல் எடுத்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

இந்தக் கோவிலை பெரும் பொருட்செலவில் நவீன முறையில் புரைமைக்கப்பட்டு கடந்த 2 மாதத்திற்கு முன் நந்தனார் கல்வி கழக தலைவர் கே. ஜ. மணிரத்தினம் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

Story image

மேலும் கோவில் கோபுரத்தில் காந்தி சிலை மற்றும் காந்தி அடிக்கல் நாட்டிய கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த சென்னை, புதுதில்லி உள்ளிட்ட பகுத்களில் உள்ள காந்தி மன்ற நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு சர்வதோய சங்க நிர்வாகிகள் சிதம்பரம் காந்தி மன்றத்தலைவர் மு.ஞானம் தலைமையில் தில்லி காந்தி அருங்காட்சி இயக்குனர் அ. அண்ணாமலை, மதுரை காந்தி அருங்காட்சியக செயலாளர் கே. ஆர். நந்தாராவ், தமிழ்நாடு சர்வோதய மண்டல் செயலாளர் எஸ். டி. ராஜேந்திரன், தேனி மாவட்ட சர்வோதய மண்டல் தலைவர் பி. கே.கே. சம்பத், மதுரை காந்தி அருங்காட்சியக கெளரவ ஊழியர் மு.சீ.தேவதாஸ் காந்தி, சென்னை காந்தி கல்வி நிலையத் தலைவர் கி. மோகன், தஞ்சாவூர் பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட காந்தியவாதிகள் சிதம்பரம் நந்தனார் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை காலை வருகை தந்தனர்.

காந்தியவாதிகளை நந்தனார் கல்வி கழக தலைவர் கே.ஐ மணிரத்தினம் மற்றும் நிர்வாகிகள் வரவேற்று கோவிலுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அவர்கள் கோயிலில் வழிபாடு செய்து தியானத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் எல். இ. ஜோதிமணி, சிதம்பரம் காந்தி மன்ற தலைவர் ஞானம் நிர்வாகிகள் முத்துக்குமரன், அருணாச்சலம், நந்தனார் கல்விக் கழகச் செயலர் வி.திருவாசகம், பொருளாளர் டி.ஜெயச்சந்திரன், கமல் மணிரத்தினம் அரவிந்த் மணிரத்தினம், டி. கே. எம். வினோபா நிர்வாகிகள் கஜேந்திரன், மணலூர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Summary

Gandhi Mandram members worship Nandanar Madam in Chidambaram!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.