பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

சிதம்பரத்தில் ஸ்ரீ நந்தனார் வீதியுலா!

நாயன்மார்களில் ஒருவரான ஸ்ரீ நந்தனார் வீதியுலா நடைபெற்றது பற்றி..

News image

நந்தனார் பட ஊர்வலத்தைத் தொடங்கி வைத்த நந்தனார் கல்விக்கழகத் தலைவர் கே.ஐ. மணிரத்தினம் - video crop

Updated On :22 ஜூன் 2026, 12:44 pm IST

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவத்தை முன்னிட்டு, நாயன்மார்களில் ஒருவரான ஸ்ரீ நந்தனார் வீதியுலா திங்கள்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் ஓமக்குளம் நந்தனார் மடத்தில் உள்ள செளந்தரநாயகி சமே சிவலோகநாதர் ஆலயத்திலிருந்து ஶ்ரீ நந்தனார் உருவ சிலை ஊர்வலம் புறப்பட்டு சிதம்பரம் தெற்கு சன்னதியை அடைந்தது. அங்கு நந்தனார் கல்விக் கழகத் தலைவர் கே .ஐ. மணிரத்தினம் தலைமை வகித்து நந்தனார் பட ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.

நந்தனார் பட ஊர்வலம் நடராஜர் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் மடத்தைச் சென்றடைந்தது. கீழ் சன்னதியில் நந்தனாருக்கு பொது தீட்சிதர்கள் சார்பில் சிறப்புச் செய்யப்பட்டது.

ஊர்வலத்தில் நந்தனார் கல்விக்கழகத் தலைவர் கே. ஐ. மணிரத்தினம் பொருளாளர் டி.ஜெயச்சந்திரன், கல்விக்கழக செயலாளர் வி.திருவாசகம், கமல் மணிரத்தினம், அரவிந்த் மணிரத்தினம், டிரஸ்ட் செயலாளர் டி.கே.எம்.வினோபா, நிர்வாகிகள் கஜேந்திரன், மணலூர் ரவி, இளைய அன்பழகன், பி.பன்னீர்செல்வம், கே.கனகசபை, டி.தெய்வசிகாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

As part of the Aani Thirumanjana Darshan festival at the Chidambaram Sri Natarajar Temple, a street procession featuring Sri Nandanar—one of the Nayanmars—took place on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.