தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கே. வெங்கட நாராயணா யார்? என்பது குறித்த ஆர்வம் பொதுமக்களிடையே மேலோங்கியிருக்கிறது.
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதாக தலைமைச் செயலர் சாய்குமார் அதிகாரப்பூர்வமாக வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.
நடிகரும் முதல்வருமான விஜய்யின் கடைசிப் படமான 'ஜன நாயகன்' படத்தை கர்நாடகத்தைச் சேர்ந்த கே.வி.என் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கே. வெங்கட நாராயணா யார்? என்பது குறித்தும், தமிழர் அல்லாதவருக்கு தமிழக அரசில் என்ன பணி குறித்த சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்திருக்கின்றன.
யார் இந்த கே. வெங்கட நாராயணா?
முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தை கே.வி.என்.ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் கே. வெங்கட நாராயணா, விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் கௌரவ வேடத்திலும் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரெஸ்டீஜ் குழுமம் எனும் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாகவும், 2017-ல் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றிய கே. வெங்கட நாராயணா, அந்த அனுபவத்தை வைத்து இவர் 2020 ஆம் ஆண்டில் கே.வி.என் புரோடக்ஷன் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்.
ரியல் எஸ்டேட் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் வெங்கட் கே.நாராயணா, விஜய், சிரஞ்சீவி, அக்ஷய்குமார், யஷ் ஆகியரை வைத்து படங்களைத் தயாரித்துள்ளார்.
கர்நாடகத் தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்த கே. வெங்கட் நாராயணா, ஆர்ஆர்ஆர் (RRR), சீதாராமம், அனிமல், தேவரா, கல்கி 2898 ஏடி மற்றும் டாக்ஸிக் தி ஃபேரி டேல் போன்ற முக்கிய படங்களையும் தயாரித்துள்ளார். மேலும், விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் படத்தையும் தயாரித்திருக்கிறார்.
பெங்களூருவில் சட்டப்படிப்பு முடித்துள்ள கே. வெங்கட நாராயணா, தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர் என்று கூறப்படுகிறது. இவருக்கு தமிழ்மொழி எழுதவோ, படிக்கவோ பெரிதாக தெரியாது என்றும் கூறப்படுகிறது.
அரசு வெளியிட்டுள்ள அரசாரணையில், சென்னை கோட்டூபுரம் பகுதியின் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளதால், அவர் சென்னையில் தங்கியிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேக்கேதாட்டு விவகாரத்தில் கர்நாடகத்துடன் தமிழ்நாட்டுக்கும் இடையே மோதல்போக்கு நீடித்துவரும் சூழலில் கர்நாடகத்தைச் சேர்ந்தவருக்கு, அதுவும் குறிப்பாக தமிழர் அல்லாத, தமிழ் மொழிகூட தெரியாத ஒருவருக்கு, அமைச்சருக்கு இணையான தில்லியின் சிறப்பு பிரதிநிதி பதவியை முதல்வர் விஜய் வழங்கியிருப்பதற்கு அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
Summary
Tamil Nadu has appointed K Venkata Narayana as its Special Representative in New Delhi for one year. The move has drawn opposition criticism over his film industry background and proximity to C Joseph Vijay.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக அரசின் வெளிப்படையான அதிகார முறைகேடு: வெங்கட நாராயணா விவகாரத்தில் சீமான் கண்டனம்

நெருக்கமானவர்களுக்கு அரசு உயர் பதவி: வெங்கட நாராயணா விவகாரத்தில் டிடிவி தினகரன் கண்டனம்
வெங்கட நாராயணா நியமனம்: அதிமுக கண்டனம்
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத் தயாரிப்பாளர்!
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan



