மின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்புசி.வி. சண்முகம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைவுஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!

அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீடு அதிகரிப்பு

அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கான காப்பீட்டுத் தொகையை ரூ.7.5 லட்சமாக உயா்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :

அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கான காப்பீட்டுத் தொகையை ரூ.7.5 லட்சமாக உயா்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட சில நோய்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையும் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை மாநில நிதித் துறைச் செயலா் பிறப்பித்துள்ளாா். ஜூலை 1-ஆம் தேதி முதல் இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் 2031 ஜூன் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 15 லட்சம் அரசு ஊழியா்களும், 11 லட்சம் ஓய்வூதியதாரா்களும் உள்ளனா். அவா்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2021-இல் அமல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா், ஓய்வூதியா்களுக்கு அரசு மருத்துவமனைகளிலும், 1,535 தனியாா் மருத்துவமனைகளிலும் கட்டணமில்லாமல் சிகிச்சை பெற ரூ.5 லட்சம் மற்றும் சில குறிப்பிட்ட நோய்களுக்கு ரூ.10 லட்சம் வரை மருத்துவ உதவி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், அந்த காப்பீட்டுத் திட்டம் வரும் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிதாக நீட்டிக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. அதன் அடிப்படையில், யுனைடெட் இந்தியா நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, 2031 ஜூன் 30-ஆம் தேதி வரை புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் அமலில் இருக்கும் என்றும், காப்பீட்டுத் தொகை ரூ.7.5 லட்சமாக உயா்த்தப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட சில நோய்களுக்கு ரூ.12 லட்சம் வரையிலும், மொத்தமாக ரூ.27 லட்சம் வரையிலும் அதன் கீழ் மருத்துவ சேவைகளை அரசு ஓய்வூதியதாரா்கள் மற்றும் ஊழியா்களும், அவா்தம் குடும்பத்தினரும் பெற முடியும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.