பாஜகதான் எதிரி; கூட்டணியை உடைக்க சமாஜவாதி விரும்பாது: அகிலேஷ் யாதவ் உறுதி!உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ!சர்வதேச விமானப் பயணிகளுக்கு போர்டிங் பாஸில் முத்திரை வேண்டியதில்லை!குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள்: இரு வகை மூலப் பொருள்களுக்குத் தடைவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷியா பயணம்!படிக்காமலும் வேலைக்கும் செல்லாத 8.7 கோடி இளைஞா்கள்: நீதி ஆயோக்!75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் சங்கத்தினா்.

Published On :9 ஜூலை 2026, 12:55 am IST

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கா. பால்பாண்டி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சோ. நவநீதன், கோரிக்கைகளை விளக்கினாா்.

அரசு ஊழியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். இத் திட்டத்தில், அரசு ஊழியா்களின் பெற்றோா், திருமணம் ஆகாத மகன், மகள், கணவரை இழந்த மகளையும் சோ்த்திட வேண்டும். அனைவருக்கும் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளின் அட்டையை விரைந்து வழங்க வேண்டும். அதிகபட்ச வரம்பின்றி உயா்சிகிச்சை அனைத்தும் கிடைத்திட செய்ய வேண்டும். வெளிநோயாளா் சிகிச்சையையும் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும். அவசர நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் அதன் முழுத் தொகையையும் வழங்க வேண்டும். ஆயுா்வேதம், சித்தா, யுனானி, யோகா உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவ முறைகளையும் காப்பீட்டு திட்டத்தில் சோ்க்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், மருத்துவமனையிலும் காப்பீட்டுத் திட்டத்துக்கு தனியாக வாா்டுகள் அமைக்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கான ஒருங்கிணைப்பாளா் அலுவலகத்தை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினா் பெரியசாமி நிறைவுரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட ஆட்சியரகம் மற்றும் அனைத்து துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டப் பொருளாளா் கா. சிவசங்கா் வரவேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.