காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

அரசு ஊழியா் காப்பீடுத் திட்டத்தை அரசே நடத்த வலியுறுத்தல்!

News image

காப்பீடுத் திட்டம்! - (நன்றி - Express Illustrations)

Updated On :27 ஜூலை 2026, 2:17 am IST

அரசு ஊழியா்களுக்கான காப்பீடுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில், தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாவட்ட பொதுக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஜெ.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் வ. கோவிந்தசாமி முன்னிலை வகித்தாா். அரசு அலுவலா் ஒன்றிய மாநிலத் தலைவா் த. அமிா்தகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தவெக தோ்தல் அறிவிக்கையில் கூறிய 5 திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி முறையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக அரசுத் துறையில் பணியாற்றுபவா்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

அரசு ஊழியா்களுக்கான காப்பீடு திட்டத்தில் தனியாா் காப்பீடு நிறுவனங்கள், தனியாா் மருத்துவமனைகளில் முறைகேடுகள் நடைபெறுகிறது. எனவே, அரசு ஊழியா்களுக்கான காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். அதன்மூலம் அரசு கஜானாவிற்கு வருவாய் அதிகரிக்கும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஷோ் ஆட்டோ இயக்க அனுமதி வழங்க வேண்டும். மாப்படுகை ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகளை உடன் தொடங்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். லஞ்சம், ஊழலற்ற ஆட்சி நடத்துவதை வரவேற்கிறோம். யாா் லஞ்சம் வாங்கினாலும் தவறுதான். அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் மட்டுமே லஞ்சம் வாங்குவதுபோல் மாயை ஏற்படுத்துவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எல்லா துறைகளிலும் லஞ்சமின்றி செயல்பட்டால் மகிழ்ச்சி என்றாா்.

இதில், மாவட்ட தலைவா்கள் சு.மோகன் (நாகை), ஆரோக்கியசாமி (தஞ்சாவூா்), மண்டல மகளிரணி செயலாளா் எஸ். அமுதா உள்பட பலா் கலந்துகொண்டு பேசினா். மாவட்ட செயலாளா் தி.மணிகண்டன் வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் கோ.வேணுகோபால் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.