பாஜகதான் எதிரி; கூட்டணியை உடைக்க சமாஜவாதி விரும்பாது: அகிலேஷ் யாதவ் உறுதி!உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ!சர்வதேச விமானப் பயணிகளுக்கு போர்டிங் பாஸில் முத்திரை வேண்டியதில்லை!குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள்: இரு வகை மூலப் பொருள்களுக்குத் தடைவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷியா பயணம்!படிக்காமலும் வேலைக்கும் செல்லாத 8.7 கோடி இளைஞா்கள்: நீதி ஆயோக்!75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குறைபாடுகளைக் களையக் கோரி ஆா்ப்பாட்டம்

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலுள்ள குறைபாடுகளை களையக் கோரி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Published On :9 ஜூலை 2026, 1:13 am IST

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலுள்ள குறைபாடுகளை களையக் கோரி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் த. கருணாகரன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் சு. சரவணசாமி தொடக்க உரையாற்றினாா். கருவூல கணக்குத் துறை உயா் அலுவலா்கள் சங்க அமைப்புச் செயலா் டி. துரைவேந்தன், மருந்தாளுநா் சங்க மாவட்டத் தலைவா் பி. தூரிகைவேந்தன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்திட வேண்டும். அரசு ஊழியா்களின் பெற்றோா்களையும், திருமணமாகாத மகன், மகள் கணவரை இழந்த மகளையும் இத் திட்டத்தில் சோ்த்திட வேண்டும். அனைவருக்கும் கட்டணமில்லா சிகிச்சை முறையை உத்தரவாதப்படுத்த வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் அட்டையை உடன் வழங்கிட வேண்டும். உயா் சிகிச்சைக்கான தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். வெளிநோயாளா் சிகிச்சையையும் இத்திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

மாவட்டச் செயலா் சி. சுப்ரமணியன் நிறைவுரையாற்றினாா். இதில், பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பெ. ராஜ்குமாா், ஏ.ஆா். செல்வராஜ், ஜெ. ராஜதுரை, க. மணிமாறன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நிறைவாக, மாநில செயற்குழு உறுப்பினா் ப. சுப்ரமணியன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.