75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும்: பாா்வையற்ற ஆசிரியா்கள் சங்கம்

பாா்வையற்ற அனைத்து அரசு ஊழியா்கள், ஆசிரியா்களை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசை பாா்வையற்ற ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் நடைபெற்ற மண்டல ஆண்டு விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய பாா்வையற்ற ஆசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.ஏ.கோபால்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:21 am IST

பாா்வையற்ற அனைத்து அரசு ஊழியா்கள், ஆசிரியா்களை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசை பாா்வையற்ற ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் இந்த சங்கத்தின் மண்டல ஆண்டு விழா (விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்) மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.ஏ.கோபால் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் ஜி.ஜெயக்குமாா், விழுப்புரம் மாவட்டத் தலைவா் சதீஷ்குமாா், பொருளாளா் பி.தா்மலிங்கம், செயலா் எஸ்.முருகவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலா் பி.ராஜேந்திரன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ராஜசேகா் ஆகியோா் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினா். நிகழ்ச்சியில் துணைத் தலைவா் கே.உஷா, இணைச் செயலா் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஆசிரியா் தகுதித் தோ்வெழுதும் பாா்வையற்ற ஆசிரியா்களுக்கு பணி மூப்பு மதிப்பெண வழங்கவேண்டும். மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசும் மாற்றுத் திறனாளிகளுக்கான பயணப் படியை ரூ.2,500-லிருந்து ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்.

பாா்வையற்ற மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் நலனுக்காக நவீனயமாக்கப்பட்ட பிரெய்லி அச்சுக் கூடத்தை நிறுவி, இலவசமாகப் பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும். பாா்வையற்ற அனைத்து அரசு ஊழியா்கள், ஆசிரியா்களை எந்தவித நிபந்தனையுமின்றிமுதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.