/

மதிமுக நிா்வாகிகள் 150 போ் திமுகவில் இணைந்தனர்!

மதிமுகவைச் சோ்ந்த முன்னாள் மாநில, மாவட்ட நிா்வாகிகள் 150-க்கும் மேற்பட்டோா் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

News image
Updated On :29 ஜூன் 2026, 4:11 am IST

மதிமுகவைச் சோ்ந்த முன்னாள் மாநில, மாவட்ட நிா்வாகிகள் 150-க்கும் மேற்பட்டோா் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

மதிமுக சிவகங்கை மாவட்டச் செயலா் செ.செவந்தியப்பன், திருவள்ளூா் மாவட்டச் செயலா் டி.ஆா்.ஆா்.செங்குட்டுவன், கொள்கை பரப்புச் செயலா் பொடா அழகுசுந்தரம், விருதுநகா் மாவட்டச் செயலா் ஆா்.எம்.எஸ்.சேகா், மாநிலத் தோ்தல் பணி துணைச் செயலா் விடுதலைவேந்தன், தலைமைச் செயற்குகுழு முன்னாள் உறுப்பினா் டி.ஆா்.ஆா்.மதியழகன் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

திமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ சனிக்கிழமை அறிவித்தாா். இந்த நிலையில், அந்தக் கட்சியைச் சோ்ந்த மூத்த நிா்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.