தவெக நடத்தும் தோழமை கட்சிகளுக்கான நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்க விசிக தலைவர் திருமாவளவனுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற விஜய்யின் தவெக ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையைப் பெறவில்லை.
பின்னர் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயுஎம்எல் போன்ற கட்சிகள் ஆதரவளித்த நிலையில் தவெக தலைவர் விஜய் ஆட்சியமைத்து முதல்வராகப் பதவியேற்றார்.
கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு எனத் தேர்தலுக்கு முன்னர் அறிவித்திருந்த விஜய், முதல்வரானதும் அவர்களுக்கு அமைச்சரவையில் பதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஒன்று தவெக சார்பில் நடத்தப்படவுள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டம் வருகிற ஜூலை 1 அன்று நடைபெறும்.
தவெகவுக்கு ஆதரவளித்த கட்சிகள் அனைத்தும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்க விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. அவர்களை அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இன்று நேரில் சந்தித்து முறையாக அழைப்பு விடுத்தனர்.
Summary
TVK's allied parties meeting: VCK leader Thiruma invited in person!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










