முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தவெக தோழமை கட்சிக் கூட்டத்துக்கு காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக தனிப் பெரும்பான்மைப்புக்குத் தேவையான 118 தொகுதிகள் இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவை நாடியது. இதனையடுத்து காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக அரசு ஆட்சி அமைத்த ஜோசப் விஜய் முதல்வரானார்.
இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடத்தப்படவுள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் சென்னை கோவளத்தில் இந்தக் கூட்டம் நாளை (ஜூலை 1) நடைபெறவுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்க விசிக தலைவர் திருமாவளவன், ஐயூஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொகிதீன், மதிமுக பொதுச் செயலர் வைகோ, மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் ஆகியோரை அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து இன்று அழைப்பு விடுத்தனர்.
இந்த நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸூக்கு தலைவர் மாணிக்கம் தாகூரை அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா இருவரும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அப்போது மாணிக்கம் தாகூர் மற்றும் அமைச்சர்கள் பரஸ்பரம் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்துகொண்டனர்.
சந்திப்பின்போது, மாநிலங்களவை எம்.பி.க்கள் பிரவீன் சக்ரவர்த்தி, கிறிஸ்டோபர் திலக், அமைச்சர் விஸ்வநாதன், எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் முதல் தோழமைக் கட்சிக் கூட்டம் என்பதால், தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாகிறதா? என்றும், இதற்கான அறிவிப்புகள் நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
Summary
The meeting convened by the TVK assumes significance against the backdrop of the disintegration of the DMK-led Secular Progressive Alliance following the 2026 Assembly poll debacle.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெக தோழமை கட்சிக் கூட்டம்: இடதுசாரிகளுக்கு நேரில் அழைப்பு!

தவெகவின் தோழமை கட்சிக் கூட்டம்: ஐயூஎம்எல், மதிமுகவுக்கு நேரில் அழைப்பு!
தனிப் பெரும்பான்மையை நோக்கி தவெக? முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!

தவெகவின் தோழமை கட்சிக் கூட்டம்: விசிக தலைவர் திருமாவுக்கு நேரில் அழைப்பு!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



