தென்காசி மாவட்டம், கடையம் சத்திரம் பாரதி மகளிர் உயர்நிலைப் பள்ளியின் பெயரை கடையம் சத்திரம் செல்லம்மாள் பாரதி மகளிர் உயர்நிலைப் பள்ளி என்று மாற்றி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையத்தில் 13.10.1982 சட்டப்படி பதிவு பெற்ற நிறுவனமாக கடையம் சத்திர நிர்வாகத்தின் மூலம் செயல்படும் சத்திரம் தொடக்கப் பள்ளி, சத்திரம் மகளிர் உயர்நிலைப் பள்ளி, சத்திரம் மேல்நிலைப் பள்ளி ஆகியவை மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழாவின்போது, சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளி, சத்திரம் பாரதி மகளிர் உயர்நிலைப் பள்ளி, சத்திரம் பாரதி தொடக்கப் பள்ளி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மகாகவி பாரதியாரின் புகழுக்கு கடையத்தைச் சேர்ந்த அவருடைய மனைவி செல்லம்மாளின் பங்கு முக்கியமானது என்பதால், அவரது பெயரையும் பள்ளி பெயருடன் இணைக்க வேண்டும் என்று மக்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து பள்ளிச் செயலர் டி.எஸ்.ஆர். வேங்கடரமணா, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுமதி கோரி மனு அளித்தார். மேலும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனையும் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்று, பள்ளியின் பெயரில் செல்லம்மாள் பெயரைச் சேர்த்துக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் ஜூன் 29}ஆம் தேதி அனுமதி வழங்கினார். இதையடுத்து, கடையம் சத்திரம் செல்லம்மாள் பாரதி மகளிர் உயர்நிலைப் பள்ளி என்று பெயர் செய்து ஆணை வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் பள்ளிக் கல்வி பாடத்திட்டக் குழு சீரமைப்பு: தமிழக அரசு அரசாணை

கடையத்தில் செல்லம்மா பாரதி 129-ஆம் திருமண நாள் விழா

பள்ளிக் கல்வித் துறை நீதிமன்ற வழக்குகள்: கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு தேசிய உதவித் தொகை: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



