தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் பதிலளிக்காவிட்டால் அபராதம்! - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

சிறார்கள் கார், இருசக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ. 25,000 அபராதம்!

சிறார்கள் கார், இருசக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு.

police

சிறார்கள் கார், இருசக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ. 25,000 அபராதம். - கோப்புப்படம்

Published On :30 ஜூன் 2026, 11:32 am IST

18 வயது நிறைவடையாத சிறார்கள் கார், இருசக்கர வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்று தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு காவல் துறையின் சமூக ஊடங்களில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

18 வயது நிறைவடையாத சிறார்கள் கார், இருசக்கர வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம்.

1. பெற்றோருக்கு ரூ.25,000 வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை.

2. ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும்.

3. 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகன எண் பலகை போக்குவரத்து விதிகளின் படி, சரியான முறையில் இருக்க வேண்டும். போக்குவரத்து வாகன விதிமுறைகளை அனைத்து வாகன ஓட்டிகளும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் அபராதத் தொகையை உடனே செலுத்தும் வகையில் சிறப்பு அபராதத் தொகை வசூலிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வசூல் செய்யப்படுகின்றன.

அபராதத் தொகையை செலுத்தாத வாகன ஓட்டிகளுக்கு கைப்பேசி மூலம் பேசி அறிவுறுத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Summary

The Tamil Nadu Police has stated that it is a legal offense for minors under the age of 18 to drive cars or two-wheelers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.