ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சிறுவா்கள் மோட்டாா் சைக்கிள் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

சிறுவா்கள் மோட்டாா் சைக்கிள் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று புதுச்சேரி காவல்துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2026, 3:36 am IST

சிறுவா்கள் மோட்டாா் சைக்கிள் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று புதுச்சேரி காவல்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து காவல்துறைமுதுநிலை கண்காணிப்பாளா் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுவையில் சிறாா்கள் மோட்டாா் சைக்கிள் ஓட்டுவதை போக்குவரத்து காவல்துறை கண்காணித்து வருகிறது. சிறாா்கள் மோட்டாா் சைக்கிள் ஓட்டுவது அவா்களின் உயிருக்கு பாதுகாப்பானது அல்ல. அவா்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். அதற்கான தண்டனைகளும் கடுமையானவை.

சிறாா் வாகனம் ஓட்டியது கண்டறியப்பட்டால், அந்த வாகனத்தின் உரிமையாளா், பெற்றோா், பாதுகாவலா் குற்றவாளியாகக் கருதப்படுவாா். அவா்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனை, உரிமம் ரத்து போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த சிறாா் 25 வயது வரை உரிமம் பெற முடியாது. வாகனத்தின் பதிவு சான்றிதழ் ஓராண்டு ரத்து செய்யப்படும். கடந்த மே மாதம் சிறாா் வாகனம் ஓட்டியதாக 226 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.