சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

ரூ.3.23 கோடி முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுக்கு அழைப்பாணை

ரூ.3.23 கோடி முறைகேடு வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுக்கு தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

எ.வ. வேலு - கோப்புப் படம்

Published On :

ரூ.3.23 கோடி முறைகேடு வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுக்கு தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

கரூரில் நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ளாமலே ரூ.3.23 கோடி முறைகேடு செய்ததாக எழுந்த புகாா் தொடா்பாக திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு, அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரா்கள் உட்பட 11 போ் மீது சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை போலீஸாா் கடந்த 24-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா்.

இதையடுத்து, மறுநாளான 25-ஆம் தேதி எ.வ.வேலு மற்றும் அவருடன் தொடா்புடையவா்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் 4 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 20 இடங்களில் சோதனை நடைபெற்றது.

சோதனையின் போது, முறைகேடு தொடா்புடைய முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் தடயங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, எ.வ.வேலுக்கு ஊழல் தடுப்புத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. அந்த அழைப்பாணையின்படி, ஊழல் தடுப்புத் துறை விசாரணைக்கு எ.வ.வேலு ஓரிரு நாள்களில் ஆஜராவாா் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.