சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு கோவையில் இன்று (ஜூன் 30) காலமானார். அவருக்கு வயது 96.
வானம்பாடி இயக்கத்தை உருவாக்கிய இவர், 2009ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
கவிஞர் புவியரசு உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள லிங்கவநாயக்கன் புதூர் கிராமத்தில் சுப்பையா என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். இவரது இயற்பெயர் சு. ஜெகநாதன். தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக தனது பெயரை புவியரசு என மாற்றிக்கொண்டார்.
இடைநிலை பட்டத்தைக் கோவை அரசு கலைக் கல்லூரியிலும் தமிழ் துறை பட்டத்தைப் பேரூர் தமிழ்க் கல்லூரியிலும் பெற்றார். கல்வி மீது கொண்ட பற்று காரணமாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
படைப்புகளும் விருதுகளும்
இவரது படைப்புகள் 1952லிருந்து வெளிவர ஆரம்பித்தன. தனது இலக்கியப் பயணத்தில் 80க்கும் மேற்பட்ட படைப்புகளைக் கொடுத்துள்ளார்.
ஷேக்ஸ்பியர், கலில் ஜிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, ஃபியோடார் தாஸ்தோவ்ஸ்கி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இவரது சில கவிதைகள் ஆங்கிலம், ரஷிய, ஹங்கேரி மற்றும் சிங்கள மொழிகளிலும் இந்திய மொழிகளான மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
2007 ஆம் ஆண்டு வெளிவந்த புரட்சிக்காரன் என்ற கவிதைத் தொகுப்பு, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றது. இக்கவிதை காஜி நஸ்ருல் இஸ்லாம் எழுதிய தி ரெவலூஷனரி என்ற கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்.
இவரது மற்றொரு கவிதைத் தொகுப்பான கையொப்பம் 2009 ஆம் ஆண்டுக்கான தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றது.
தமிழ் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளையானது, புவியரசு வளர்ச்சி மையம் என இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
இவர் எழுதிய "முக்கூடல்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
மொழிபெயர்ப்புகள்
தி புக் ஆஃப் மிர்டாட் - மிகய்ல் நய்மா (ஓஷோவினால் பாராட்டப்பட்ட இப்புத்தகத்தை 'மிர்தாதின் புத்தகம்' என தமிழில் மொழி பெயர்த்தார்.)
தி பிரதர்ஸ் கரமஸோவ் (கரமஸோவ் சகோதரர்கள்) - ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி, ஹாம்லெட், ஒத்தல்லோ, ரோமியோ அண்ட் ஜூலியட், உமர் கய்யாமின் ருபாயத்’
விருதுகள்
சாகித்திய அகாதமி விருது (மொழிபெயர்ப்புக்கு) - 2007
கலைஞர் பொற்கிழி விருது - 2008
சாகித்திய அகாதமி விருது (தமிழுக்கு) - 2009
சாகித்திய புரஸ்கார் விருது - கேரள பண்பாட்டு மையம்
தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு
Summary
Sahitya Akademi Award-winning writer and poet Puviyarasu has passed away
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரப்பெற்றோம் (29-06-2026)

பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்! திரையுலகம் அதிர்ச்சி!

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

இலக்கியங்களை வாசிக்கும் மரபை விட்டுவிட்டோம்! - எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன் வேதனை!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |



