தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையம் அருகே நடக்கும் அரசு நிகழ்ச்சியில் 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். மரக்காணம்-புதுவை பிரிவு, பரமக்குடி-ராமநாதபுரம் பிரிவு 4 வழிச்சாலை பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் மறுசீரமைக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர், பொள்ளாச்சி, சோழவந்தான் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களை திறந்துவைத்து, சென்னை கடற்கரை-எழும்பூர் 4ஆவது பாதையை அவர் அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர் ஏ.வ.வேலு, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகையில், புனித மதுரை மாநகருக்கு வந்திருப்பதால் பெருமைப்படுகிறேன். தமிழகத்தை முன்னேற்றுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. மத்திய பட்ஜெட் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையில் வரலாறு சிறப்பு மிக்க மாற்றம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் 1,300 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதைகள் அமைத்துள்ளோம். எங்கள் அரசு வந்த பிறகு தமிழ்நாடு, ரயில்வேக்கான நிதி ஒதுக்கீடு 9 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம்-பரமக்குடி 4 வழி பாதையாக மாற்றுவதற்கு ரூ.1,800 கோடியில் முதலீடு செய்ய உள்ளோம். ராமேஸ்வரம்-தனுஷ்கோடி ஆகிய இடங்களை சென்றடைய கணிசமாக நேரத்தை குறைக்கிறது.
தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு 10 ஆண்டுகளைவிட 3 மடங்காக உயர்ந்துள்ளது. பாதுகாப்பு, செயல் திறனை அதிகரிக்கும் வகையில் சுரங்கப்பாதை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைப்பதற்கான நற்பெயர் எனக்கு கிடைத்துள்ளது. மேக் இன் இந்தியா தொலைநோக்கு தர்சார்பினை ஊக்கப்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தருகிறது.
தமிழ்நாடு வளமான வரலாறு, கலாசாரம் கொண்ட மாநிலம், ஆதிச்சநல்லூர் உலக கலாசார மையமாக மாற்றப்படும். புலிகட் ஏரி, பொதிகை மலையை சுற்றி சுற்றுச்சூழல் சுற்றுலா ஏற்படுத்தி, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்தியா முழுவதும் 200 தொழில்துறை தொகுப்புகள் இனம்காணப்பட்டு ஊக்குவிக்கப்படும்.2047க்குள் வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற உணர்வால் ஒன்றிணைக்கப்படுவோம். இவ்வாறு குறிப்பிட்டார்.
Summary
Prime Minister Narendra Modi on Sunday inaugurated infrastructure projects worth over Rs 4,400 crore and laid foundation stone for four-laning of Marakkanam–Puducherry section and Paramakudi–Ramanathapuram section of key NH routes.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் முதல்வர், துணை முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி

தமிழகம், கேரளத்தில் ரூ.16,450 கோடி திட்டங்கள்: பிரதமா் மோடி நாளை தொடங்கி வைக்கிறாா்

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


