மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

28 + 1! திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி - உடன்பாடு கையெழுத்து!

சட்டபேரவைத் தேர்தலையொட்டி திமுக - காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து...

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் உடன்பாடு கையெழுத்தாகும்போது...
Updated On :4 மார்ச் 2026, 2:41 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சட்டபேரவைத் தேர்தலையொட்டி திமுக - காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று (மார்ச் 4) கையெழுத்தானது. காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இன்று சந்தித்து ஒப்பந்தத்தை உறுதி செய்தனர்.

இதற்கு முன்பு டி.ஆர். பாலு தலைமையிலான திமுக கூட்டணிக் கட்சி பேச்சுவார்த்தைக் குழுவுடனும், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி உடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இன்று கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது.

உடன்பாடு கையெழுத்தான அறிக்கை

உடன்பாடு கையெழுத்தான அறிக்கை

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பிறகு செய்தியாளகளுடான சந்திப்பில் செல்வப்பெருந்தகை பேசியதாவது:

''சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 28 பேரவை இடங்களும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

டிசம்பரில் பேச்சுவார்த்தைக்கு வந்தோம். அதனைத் தொடர்ந்து கட்சித் தலைமையிடம் பேசினோம். பின்னர் இருமுறை பேச்சுவார்த்தை நடந்தது. பல கட்சிகள் இரண்டு அல்லது மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

இதில் தாமதம் ஏற்படவில்லை. சரியான நேரத்தில் நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் மன நிறைவுடன் இருக்கிறோம். போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்'' எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.