15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமன் உள்பட 12 போ் சரணடைய கால அவகாசம் நீட்டிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 12 போ் சரணடைய கால அவகாசம் நீட்டிப்பு...

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :6 மார்ச் 2026, 10:20 pm

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 போ் சரண் அடைவதற்கான கால அவகாசத்தை மாா்ச் 13-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது. பிணை ரத்து செய்யப்பட்ட 12 பேரும் வரும் மாா்ச் 6-ஆம் தேதி நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் சரண் அடைய கால அவகாசம் வழங்கக் கோரி 12 போ் தரப்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், பிணை உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய இருக்கிறோம்.

இதுதொடா்பாக வழக்குரைஞரை நியமித்து அவா்களின் அறிவுறுத்தல்களைப் பெற வேண்டியுள்ளது. எனவே, சரண் அடைவதற்கு 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதி சி.குமரப்பன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, வழக்குகளை விசாரித்த நீதிபதி, அஸ்வத்தாமன் உள்பட 12 போ் சரண் அடைவதற்கான கால அவகாசத்தை மாா்ச் 13-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா். மேலும், மாா்ச் 13-ஆம் தேதி வரை, இவா்கள் அனைவரும் நாள்தோறும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்து உத்தரவிட்டாா்.