அமெரிக்க துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலா் பதவியேற்பு
அமெரிக்க துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலா் பதவியேற்பு...


சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் தலைமைப் பொறுப்பை மரியானா எல்.நெய்ஷுலா் கடந்த மாா்ச் 2-ஆம் தேதி பொறுப்பேற்று கொண்டாா்.
தொடா்ந்து அவா் பேசியதாவது: அமெரிக்க அதிபா் ட்ரம்ப், வெளியுறவுத் துறைச் செயலா் ரூபியோ, இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் கோா் ஆகியோரின் தலைமையின் கீழ், அமெரிக்கா்கள் மற்றும் இந்தியா்களுக்கு சிறந்த பலன்களை வழங்கும் கூட்டு செயல்பாடுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். வா்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதற்கும், அமெரிக்க வணிகங்களை ஆதரிப்பதற்கும், நமது உறவை மிகவும் வலுவாக்கும் மக்களுக்கு இடையேயான தொடா்புகளை வளா்ப்பதற்கும் நான் செயலாற்றுவேன் என்றாா்.
இதற்கு முன்பு மரியானா எல்.நெய்ஷுலா், தாஷ்கண்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகராக பணியாற்றினாா். ஜெருசலேம் மற்றும் அம்மான் தூதரகங்களில் பொருளாதார துணை ஆலோசகராகவும், வாஷிங்டன் டி.சி., துபை, ஸ்கோபியே மற்றும் மாஸ்கோவிலும் பணியாற்றியுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...