மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அம்மா உணவகங்களில் சிலிண்டர் தட்டுப்பாடா? திமுக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்...

News image
அம்மா உணவகம்- கோப்புப் படம்
Updated On :10 மார்ச் 2026, 9:33 am

இணையதளச் செய்திப் பிரிவு

சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து தொடர்ந்து உணவு வழங்க வேண்டும் என்று திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கவும் சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர் விற்பனை நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வணிகம் சார்ந்த நிறுவனங்கள் இதுபற்றி கவலை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசுக்கு வலியறுத்தி வருகின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

எல்பிஜி-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து , தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

அதேபோல், மக்களிடையே இதை வைத்து தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, தமிழகத்தில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும் எனவும்,

ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

சென்னையில் அம்மா உணவகங்களில் சிலிண்டர் தட்டப்பாடு இருப்பதாக வெளியான தகவல்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை. சென்னையில் எல்பிஜி மூலம் இயங்கும் மின் மயானங்களில் எரிவாயு தட்டுப்பாடு தற்போது வரை இல்லை. தட்டுப்பாடு ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.