டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!மேற்கு ஆசியா பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

வேட்டி, சட்டையுடன் திருச்சி வந்தார் பிரதமர் மோடி!

வேட்டி, சட்டையுடன் திருச்சிக்கு வருகைதந்த பிரதமர் மோடி...

கோப்புப்படம்

Published On :11 மார்ச் 2026, 5:10 pm IST

தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகை தந்துள்ளார்.

கேரள மாநிலத்தில் இன்று பிற்பகல் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் மாலை 4.45 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

திருச்சிக்கு வருகைதந்த பிரதமர் மோடி, தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்துள்ளார்.

விமான நிலையத்திலிருந்து விழா நடைபெறும் பஞ்சப்பூருக்கு இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டரில் பிரதமர் புறப்பட்டுச் சென்றார்.

அங்கு முதலில், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ரயில்வே துறைகளின் சாா்பில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, சுமாா் ரூ. 5,650 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமா் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும், கொடியசைத்தும் தொடங்கி வைக்கிறாா்.

இதில், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ரூ. 3,680 கோடி முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் நகர எரிவாயு விநியோக வலையமைப்புக்கு அடிக்கல் நாட்டும் பிரதமா், சென்னை மணலியில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் ரூ. 1,490 கோடி முதலீட்டிலான மசகு எண்ணை உற்பத்தி ஆலையை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். பிரதமரின் கிராம சதக் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 370 கி.மீ. நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை திறந்து வைக்கிறாா். தேசிய நெடுஞ்சாலை 81-இல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறாா். தொடா்ந்து, 2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் சேவையையும் பிரதமா் கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா்.

இதன் பிறகு, அதே பகுதியின் மறுபக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

இதற்கு முன்னதாக தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் போதும் பலமுறை வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

PM Narendra Modi came to Trichy wearing a dhoti and shirt!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.