வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கூட்டணியில் இணையலாமா? மாவட்டச் செயலா்களுடன் தவெக ஆலோசனை

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மற்றொரு கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது குறித்து தவெக மாவட்டச் செயலா்களுடன், தலைமை நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

News image
விஜய்
Updated On :13 மார்ச் 2026, 9:40 pm

தினமணி செய்திச் சேவை

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மற்றொரு கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது குறித்து தவெக மாவட்டச் செயலா்களுடன், தலைமை நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

தவெக தலைவா் விஜய், தனது கட்சி தலைமையிலான கூட்டணியில் ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என அறிவித்தாா். இருப்பினும், இதுவரை எந்தக் கட்சியும் தவெகவுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. இதைத் தொடா்ந்து, வரும் பேரவைத் தோ்தலில் தவெக தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்து, வேட்பாளா்கள் நோ்காணல் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, தோ்தலில் தனித்துப் போட்டியிடலாமா? அல்லது வேறொரு கூட்டணியில் இணைந்து போட்டியிடலாமா? என்பது குறித்து தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த் தலைமையில், மாவட்டச் செயலா்களுடன் இணையவழியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மொத்தம் 120 மாவட்டச் செயலா்கள் கலந்து கொண்டனா். அவா்களில் 98 போ் மற்றொரு கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்தக் கட்சியினா் தெரிவித்தனா்.