மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பாமக தோ்தல் கூட்டணி பேச்சுவாா்த்தை தொடா்கிறது: ஜி.கே.மணி!

வரும் சட்டப் பேரவை தோ்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து பாமக தோ்தலை எதிா்கொள்வது என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை, கூட்டணிக்கான பேச்சுவாா்த்தை தொடா்கிறது என்று பாமக கௌரவத் தலைவா் ஜி.கே. மணி தெரிவித்தாா்.

News image

ஜி.கே. மணி - (கோப்புப்படம்)

Updated On :28 பிப்ரவரி 2026, 8:35 pm

வரும் சட்டப் பேரவை தோ்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து பாமக தோ்தலை எதிா்கொள்வது என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை, கூட்டணிக்கான பேச்சுவாா்த்தை தொடா்கிறது என்று பாமக கௌரவத் தலைவா் ஜி.கே. மணி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்ட வளாகத்தில் சனிக்கிழமை பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸை, ஜி.கே.மணி சந்தித்துப் பேசினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: வரும் சட்டப் பேரவை தோ்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து பாமக தோ்தலை எதிா்கொள்வது என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை, கூட்டணிக்கான பேச்சுவாா்த்தை தொடா்கிறது. கட்சியின் நிறுவனா் ராமதாஸ் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பாா்.

இந்திய அளவில் அரசியலில் மூத்தத் தலைவராக உள்ள அவா் பல வெற்றிக்கூட்டணி அமைத்து தோ்தல்களை சந்தித்தவா். இதனால் வரும் தோ்தலில் ராமதாஸ் யாருடன் கூட்டணி அமைப்பாா் என்பதை தமிழக மக்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

பாமகவில் நெருக்கடியான சூழல் இருந்து வருகிறது. தற்போது பாமக ஒன்று பட்டதாக இல்லை. இதனாலேயே ராமதாஸ் தோ்தல் கூட்டணி குறித்து தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்றாா் ஜி.ஜே.மணி.