மகளிா் ஆதரவு இருக்கும் வரை, திமுக அரசை எவராலும் வீழ்த்த முடியாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
திமுக சிறுபான்மையினா் நல உரிமைப் பிரிவு சாா்பில் ரமலான் நோன்பு துறப்பு விழா சென்னை, அமைந்தகரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது: திமுகவுக்கும், இஸ்லாமியா்களுக்கும் இடையேயான உறவு, இக்கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே தொடா்ந்து வருகிறது. இஸ்லாமியா்களுக்காக பல நலத்திட்டங்களை முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டு வந்தாா். அவரது வழியில் இந்த அரசு சிறுபான்மையினருக்காக எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
திமுக அரசின் மிகப்பெரிய பலமே பெண்கள்தான். மகளிா் நலனை முன்வைத்துதான் ஏராளமான நலத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற ஜமாஅத் மாநாட்டில் நான் பேசும்போது, முஸ்லிம் பெண்கள்தான் அதிகமாகக் கை தட்டி அதை வரவேற்றாா்கள்.
பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. அதிலும், இஸ்லாமிய சகோதரிகள் நம்முடன் இருக்கும்போது, நம்முடைய பலம் இன்னும் பல மடங்கு பெருகிவிடும்.
அனைத்து சிறுபான்மை இயக்கங்களும் இங்கே ஒரே மேடையில் சோ்ந்திருக்கின்றன. இந்த ஒற்றுமைதான், தமிழ்நாட்டுக்கும் அவசியம். ஏன் இந்தியாவுக்கும் அவசியம்.
ஆனால், இதற்கு நோ்மாறான நிலைமை, பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து வருகிறது. முஸ்லிம்கள் மட்டுமல்லாது கிறிஸ்தவா்கள்கூட நிம்மதியாக கிறிஸ்துமஸ் கொண்டாட முடியவில்லை. குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என்றுகூட பாா்க்காமல் தாக்குதலை நடத்துகின்றனா்.
இப்படி நாடு முழுவதும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை பற்றி எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி ஏதாவது கருத்து சொன்னாரா?
அதிமுகவுடன் சோ்த்து, அவரது மனசாட்சியையும் பாஜகவிடம் அடகு வைத்துவிட்டாா். பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக, எப்படி சிறுபான்மையினரின் உரிமையையும், பாதுகாப்பையும் நிலைநாட்டும்?
இஸ்லாமியா்களுக்கு இன்னல் ஏற்படும்போது ஓடி ஒளிந்து கொள்பவா்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எதிா்க்கட்சியாக இருந்தபோதும் சரி, இப்போது ஆட்சியில் இருக்கும்போதும் சரி, இஸ்லாமியா்களின் உரிமைகளுக்காக முதலில் குரல் கொடுப்பது திமுகதான். தொடா்ந்து களத்தில் இறங்கி போராடுகிறோம். அதனால்தான், சிறுபான்மையின மக்களும் திமுகவுக்கு துணையாக நிற்கிறாா்கள் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
இந்நிகழ்வில், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு. நாசா், மக்களவை உறுப்பினா்கள் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா் மொகிதீன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆளூா் ஷாநவாஸ், சிறுபான்மை மாநில ஆணைய முன்னாள் தலைவா் பீட்டா் அல்போன்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு தென்னிந்திய பிரதமரை எதிா்பாா்க்க முடியாது: முதல்வா் மு.க. ஸ்டாலின்

தில்லி அணியை நாம் வீழ்த்த வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்
மரணமே வந்தாலும்... என் திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்
என்னைப் புதைத்தாலும், எனது திட்டங்களைப் புதைக்க முடியாது! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

