டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

தமிழ்நாட்டில் 6 ரயில் வழித்தடங்களில் கூடுதல் பாதைகள்: இறுதி ஆய்வுக்கு அனுமதி

தமிழ்நாட்டில் 6 ரயில் வழித்தடங்களில் கூடுதல் ரயில் பாதைகள் அமைப்பதற்கான இறுதிக்கட்ட ஆய்வு நடத்த அனுமதி

Additional railway line on 6 rail routes

கூடுதல் ரயில் பாதைகள் அமைக்க ஆய்வு - பிரதிப் படம்

Published On :

தமிழ்நாட்டில் 6 ரயில் வழித்தடங்களில் கூடுதல் ரயில் பாதைகள் அமைப்பதற்கான இறுதிக்கட்ட ஆய்வு நடத்த ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை - அரக்கோணம், அரக்கோணம் - ரேணிகுண்டா, சென்னை - கூடூர் ஆகிய ரயில் வழித்தடஙளில் 5, 6-ஆவது பாதைகள், விழுப்புரம் - திருச்சி - திருநெல்வேலி - நாகர்கோயில் வழித்தடத்தில் 3, 4 -ஆவது பாதைகள், திருச்சி - காரைக்குடி - மானாமதுரை - மதுரை வழித்தடத்தில் 2-ஆவது பாதை, போத்தனூர் - பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் 2-ஆவது பாதை அமைக்கவும் இறுதிக்கட்ட ஆய்வு நடத்துவதற்கான அனுமதியை ரயில்வே வாரியம் அளித்துள்ளது.

மேலும், திருச்சியில் ஜி கார்னர் பகுதியில் உயர்மட்ட சுழற்பாலம் அமைப்பதற்கான தடையில்லாச் சான்றிதழையும் ரயில்வே வாரியமமைத்துள்ளது. இதனால், திருச்சி மக்களின் 16 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்தப் பாலத்துக்காக ஒன்றரை ஆண்டுகளாக பணிகள் மேற்கொண்டதாகக் கூறிய மதிமுக எம்.பி. துரை வைகோ, மத்திய அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

Summary

Permission granted to conduct final stage study for construction of additional railway tracks on 6 rail routes in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.