தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இபிஎஸ் இன்று தில்லி பயணம்! பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையா?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்

News image
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
Updated On :19 மார்ச் 2026, 2:28 am

இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதியில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்தும் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இன்னும் அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இன்று தில்லிக்கு செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பயணத்தின்போது, பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசமான புதுச்சேரிக்கு ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.