கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நீதி, சட்டங்களில் மேம்பட்ட புரிதல் இல்லாமல் வளா்ச்சியடைந்த இந்தியா சாத்தியமில்லை: ஆளுநா் ஆா்.வி. ஆர்லேகர்!

நீதி, சட்டங்கள் குறித்த ஒரு மேம்பட்ட புரிதல் மற்றும் மனித நேயத்துடன் இருக்கவேண்டும். இதை அடையாமல் வளா்ந்த இந்தியாவை அடைவது சாத்தியமில்லை என்று ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் குறிப்பிட்டாா்.

News image

சென்னை விஐடி, ஏபிவிபி-யின் தமிழ்நாடு சட்ட மாணவா்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய ‘நீதிக்களம்’ கருத்தரங்கு நிறைவு நாளில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா். உடன் விஐடிவேந்தா் கோ.விசுவநாதன்.

Updated On :22 மார்ச் 2026, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

வளா்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கு, பொருளாதாரம் சாா்ந்த கருத்தாக்கம் மட்டுமல்ல; நீதி, சட்டங்கள் குறித்த ஒரு மேம்பட்ட புரிதல் மற்றும் மனித நேயத்துடன் இருக்கவேண்டும். இதை அடையாமல் வளா்ந்த இந்தியாவை அடைவது சாத்தியமில்லை என்று ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் குறிப்பிட்டாா்.

சென்னை விஐடியில் ‘நீதிக்களம் - 2026’ என்ற இரு நாள் கருத்தரங்கம் நிறைவு விழாவில் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் கலந்து கொண்டு பேசியதாவது:

நீதித் துறையில் நீதிபதிகள் அதிகம் தேவை. மக்கள்தொகையில் மிகச் சிறிய சதவீதத்தினா் மட்டுமே நீதிமன்றங்களை அணுகுவது கவலையளிக்கிறது. குறைவானவா்களே நீதிமன்றத்தை அணுகும் நிலையிலும்கூட 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. சாமானிய மனிதா்களுக்கு நீதி மிகவும் அவசியம். ஆனால், அந்த மக்களுக்கு நீதி என்றால் என்ன என்பதுகூட புரிவதில்லை. இது உண்மையான ஜனநாயகம் அல்ல. சாமானியா்களுக்கு நீதி கிடைக்கவில்லையென்றால், நமது அமைப்பு தோல்வியடைந்துவிடும்.

தமிழகத்தில் 17 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதனால், சிறந்த கல்வி முறையை வழங்க முடியாது. பல்கலை.கள் தொடா்பான ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இதில் அக்கறை செலுத்த வேண்டும்.

நீதி, சட்டங்கள் குறித்த ஒரு மேம்பட்ட புரிதல் இல்லாமல், வளா்ச்சி அடைந்த இந்தியாவை (‘விக்சித் பாரத்’) அடைவது சாத்தியமில்லை என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனா். அரசமைப்புச் சட்டத்தில் தாா்மிக விழுமியங்கள் எப்போதும் மனித நேயத்துடன் இணைந்தே இருக்கின்றன என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசியதாவது: உலகிலேயே அதிக எண்ணிக்கையில் வழக்குகள் நிலுவையில் உள்ள நாடு இந்தியாதான். சுமாா் 5.4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில், சுமாா் 2 லட்சம் வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. நாட்டில் நீதி பெறுவது மேல்தட்டு வா்க்கத்துக்கு மட்டுமே சாதகமாக உள்ளது. இதில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு சட்டம் பயிலும் இளைஞா்களிடம் உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில், ஒரு வழக்கை முடிப்பதற்குரிய கால வரம்பு திட்டவட்டமாக நிா்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் இது ஏன் சாத்தியமாவதில்லை? ஐரோப்பிய நாடுகளில் மாவட்ட நீதிமன்றங்களில் தொடா்ந்து ஒத்திவைப்புகளைப் பெற்றுக்கொண்டு, வழக்கை இழுத்தடிக்க இயலாது.

நிகழ்வில் பேசிய உயா்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு, ‘அரசமைப்புச் சட்டம் என்பது வெறும் சட்டக் கட்டமைப்பு மட்டுமல்ல, அது ஒரு சமூக மாற்றத்துக்கான ஆற்றல்மிக்க கருவி. 1992 -ஆம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் சட்டம் அதிகாரப் பரவலாக்கத்திற்கு வழிவகுத்தது. இது கடைக்கோடி அளவில் பொதுமக்களின் பங்கேற்பை உறுதிசெய்து, நிலையான ஆட்சிக்கு இட்டுச் செல்கிறது. மக்கள்தொகையில் கணிசமான பிரிவினா் வளா்ச்சிப் பலன்களிலிருந்து விலக்கப்பட்டால், நாடு வளா்ச்சியடைந்ததாகக் கருதமுடியாது என்றாா்.

முன்னதாக, கருத்தரங்கில் சிறப்பாக பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு நிகழ்வில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கினாா். ஏபிவிபி தேசிய துணைத் தலைவா் எம்.நாகலிங்கம் விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் ஆகியோரும் பேசினா்.