ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனாஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு பற்றி...

தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் (கோப்புப்படம்)

Updated On :

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23) மாலை 4 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என்று மதுரை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்தவா் வணிகா் ஜெயராஜ் (58). இவரது மகன் பென்னிக்ஸ் (31). இவா்கள் இருவரும் அதே பகுதியில் கைப்பேசி விற்பனை, பழுது நீக்கம் செய்யும் கடை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கரோனா பொது முடக்கம் அமலில் இருந்த போது, கைப்பேசி கடையை தாமதமாக அடைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, காவல் துறையினா் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் இருவரும் கொல்லப்பட்டனர்.

இதுதொடா்பாக அப்போதைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலா்கள் முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை உள்பட 9 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கு விசாரணையில், சிபிஐ தரப்பு வழக்குரைஞா் விஜயன் தனது இறுதி வாதங்களை முன்வைத்துவிட்டாா். மேலும், கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா் ரகு கணேஷ், காவலா்கள் முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை ஆகியோா் தரப்பில் இறுதி வாதங்கள் நிறைவடைந்தன. வழக்கு தொடா்பாக அனைத்துத் தரப்பினரின் இறுதி வாதங்களும் நிறைவு பெற்றன.

இந்த நிலையில், மதுரை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், இன்று காலை 10.30 மணியளவில் இந்த வழக்கில் தீா்ப்பளிப்பாா் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை நீதிமன்றம் கூடிய நிலையில், மாலை 4 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டுள்ளார்.

Summary

Satankulam father-son murder case: Verdict this evening!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.