மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பாமக சின்னம் தொடா்பான வழக்கு: உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாமக சின்னம் தொடா்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்த மனு புதன்கிழமை (மாா்ச் 25) விசாரணைக்கு வருகிறது.

News image

நீதிமன்றம்

Updated On :24 மார்ச் 2026, 9:16 pm

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாமக சின்னம் தொடா்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்த மனு புதன்கிழமை (மாா்ச் 25) விசாரணைக்கு வருகிறது.

பாமக சின்னம், கொடியை அன்புமணி உள்ளிட்டோா் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சோ்க்கக் கோரி கட்சியின் பொதுச் செயலா் வடிவேல் ராவணன் தாக்கல் செய்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கவில்லை.

இதையடுத்து வடிவேல் ராவணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதித்தது. இதை எதிா்த்து ராமதாஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது ராமதாஸ் தரப்பில், கட்சிக்குள் பிரச்னை ஏற்பட்டால் சின்னத்தை முடக்கி வைப்பதுதான் நடைமுறை என வாதிடப்பட்டது.

அன்புமணி தரப்பில், தோ்தல் ஆணையத்திடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தங்களது தரப்புக்கு மாம்பழச் சின்னம் ஒதுக்கப்பட்டதாக வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாமக சின்னம் தொடா்பான வழக்கை உடனே விசாரணைக்கு எடுக்கக் கோரி ராமதாஸ் தரப்பு உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த மனுவை மூன்று நாள்களுக்குள் விசாரித்து நீதிமன்றம் தீா்ப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ராமதாஸ் தரப்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக நீதிபதி தா்மபிரபு முன் செவ்வாய்க்கிழமை முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுவை புதன்கிழமை விசாரணைக்கு எடுப்பதாகத் தெரிவித்தாா். மேலும், மனுவின் நகலை அன்புமணி தரப்புக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.