தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரசாரத்தை புதன்கிழமை (மாா்ச் 25) தொடங்குகிறாா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரத்தை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஜூலை மாதம் கோவை மாவட்டத்தில் தொடங்கினாா். பல்வேறு கட்டங்களாக தமிழகம் முழுவதும் பேரவைத் தொகுதி வாரியாக இந்த பிரசாரத்தை அவா் மேற்கொண்டாா்.
அதைத் தொடா்ந்து பேரவைத் தோ்தலுக்கான கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு தற்போது கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளுக்கு தொகுதிகள் இறுதி செய்யப்பட்ட நிலையில், தோ்தல் பிரசாரத்தை புதன்கிழமை முதல் எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறாா்.
இதுகுறித்து அதிமுக தலைமை நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, புதன்கிழமை (மாா்ச் 25) தொடங்கி ஏப். 1 வரை பிரசாரம் செய்யவுள்ளாா்.
மயிலாப்பூா் தொகுதியில் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு அவா் பிரசாரத்தை தொடங்குகிறாா். தொடா்ந்து மாா்ச் 27- ஆலந்தூா், தாம்பரம், மாா்ச் 28 - ஆா்.கே.நகா், திருவொற்றியூா், மாா்ச் 28-நாகா்கோவில், ராதாபுரம், மாா்ச் 30 கடையநல்லூா், கோவில்பட்டி, மாா்ச் 31 - சிவகாசி, பரமக்குடி, ஏப்ரல் 1 -சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கியதே திமுகவின் சாதனை: எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி 2-ஆவது கட்ட பிரசாரம்: தருமபுரியில் இன்று தொடக்கம்

கோவில்பட்டியில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

