சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ஜோலார்பேட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி பிரசாரம்!

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி ஜோலார்பேட்டையில் பிரசாரத்தைத் தொடங்கியது பற்றி...

News image

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி ஜோலார்பேட்டையில் பிரசாரத்தைத் தொடங்கினார். - DIN

Updated On :26 மார்ச் 2026, 2:15 pm IST

ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தனது முதல் பிரசாரத்தை இன்று(வியாழக்கிழமை) தொடங்கினார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளை கொண்டு என்டிஏ கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடப்படுகிறது.

அதனையடுத்து அதிமுக சார்பில் ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை நகர பகுதியில் தனது கூட்டணி கட்சி பொறுப்பாளர்களோடு பிரசாரத்தைத் தொடங்கினார்.

பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி பேசியது:

திருப்பத்தூர் மாவடத்தில் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுகவும், திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான அமமுக கட்சியின் வேட்பாளரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி ஜோலார்பேட்டையில் பிரசாரத்தைத் தொடங்கினார்.

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி ஜோலார்பேட்டையில் பிரசாரத்தைத் தொடங்கினார்.

எனவே, நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற வைத்து எடப்பாடி பழனிசாமியிடம் வெற்றியை சமர்பிப்போம் எனத் தெரிவித்தார்.

மேலும், திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அதனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்த தொகுதி கூட்டணி கட்சிக்குத் தர வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே, நான்கு தொகுதிகளிலும் அதிமுகதான் போட்டியிடுகிறது. அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டியிடுகிறார்கள் என்ற எண்ணத்தோடு பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும் என அவர் பேசினார்.

பிரசாரத்தின் போது வாணியம்பாடி அதிமுக எம்எல்ஏ உறுப்பினர் செந்தில்குமார், அதிமுக மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Summary

Former Minister K.C. Veeramani started election campaigning in Jolarpettai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.