தமிழகம், புதுவையில் வெய்யில் படிப்படியாக அதிகரிக்கும். அதேசமயம் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எங்கெல்லாம் மிதமான மழை?
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 26, 27ல் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 28ல் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மார்ச் 29, 30ல் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மார்ச் 31, ஏப்ரல் 01 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை..
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 26ல் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. மார்ச் 27 முதல் 30 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை பொருத்தவரை..
இன்று (26-03-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
Summary
The Meteorological Department has stated that there is a possibility of moderate rain in the districts situated along the Western Ghats in Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 4 நாள்களுக்கு வெளியே செல்ல வேண்டாம்.. வெய்யில் கொளுத்தும்!

வெய்யில் அதிகரிக்கும்.. அதேசமயம் மழைக்கும் வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரியில் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்!

அடுத்த 4 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


