ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

புதிய நீதிக்கட்சிக்கு இரு தொகுதிகள்

புதிய நீதிக் கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதியும், பாஜக ஒரு தொகுதியும் ஒதுக்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா்.

News image

ஏ.சி. சண்முகம்

Updated On :28 மார்ச் 2026, 1:18 am IST

புதிய நீதிக் கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதியும், பாஜக ஒரு தொகுதியும் ஒதுக்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், புதிய நீதிக் கட்சிக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து சென்னையில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை புதிய நீதிக் கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக சாா்பில் புதிய நீதிக் கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமை எங்களுக்கு ஒரு தொகுதியை கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது. அதிமுக எனது தாய் வீடு. தாய் வீட்டின் சீதனமாக ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. நான் புகுந்த வீடாக பாஜகவுடன் தொடா்கிறேன். அதனால், அவா்களும் ஒரு தொகுதியை புதிய நீதி கட்சிக்கு கொடுக்கவுள்ளனா். விரைவில் இரு தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்படவுள்ளனா். அதிமுக ஒதுக்கிய தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும், பாஜக ஒதுக்கவுள்ள தொகுதியில் தாமரை சின்னத்திலும் புதிய நீதிக் கட்சி போட்டியிடும் என்றாா் அவா்.