பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.

News image

முதல்வர் ஸ்டாலின். - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 8:36 am IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.

தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதியில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

வேட்பாளர் பட்டியலை கட்சிகள் வெளியிட்டு வரும்நிலையில், அடுத்தகட்டமாக பிரசாரத்திலும் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன.

இதனிடையே, தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 164 வேட்பாளர்களை கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், சனிக்கிழமையில் (மார்ச் 28) வெளியிட்ட நிலையில், இன்று தேர்தல் அறிக்கையையும் வெளியிடவுள்ளார்.

ஏற்கெனவே, தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவி வரும்நிலையில், அவற்றில் அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெகவும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு விட்டனர்.

இந்த நிலையில், இன்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகவுள்ளது. மற்றைய போட்டிக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை உட்கொள்ளும் அளவுக்கு திமுகவின் தேர்தல் அறிக்கைகள் இருக்குமா என்று தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும், இந்த முறை திமுகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் நலன் சார்ந்த அறிவிப்புகள் அதிகளவில் இடம்பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில்,

ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள், ரூ. 2,000 மகளிர் உரிமைத் தொகை, பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவச பயணம், சொந்த வீடு இல்லாதோருக்கு கான்கிரீட் வீடு, கல்விக் கடன் ரத்து, விலையில்லா குளிர்சாதனப் பெட்டி முதலியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே,கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக தேர்தல் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் இலவச எல்இடி டிவி, இலவச முழு உடல் பரிசோதனை திட்டம், இளைஞர்களுக்கென தனி அறிவிப்புகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

Summary

DMK Election Manifesto Released Today!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.