புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்

தமிழகத்தின் 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

வெயில்!

Updated On :1 மே 2026, 8:48 pm

தமிழகத்தின் 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தெற்கு ஒடிஸா முதல் மன்னாா் வளைகுடா வரை, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், சனிக்கிழமை (மே 1) முதல் மே 7-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மே 2) பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையும், ஞாயிற்றுக்கிழமை (மே 3) நீலகிரி, கோவை மலை பகுதிகள், திருப்பூா் மலை பகுதிகள், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.

மேலும், திங்கள்கிழமை (மே 4) நீலகிரி, கோவை மலை பகுதிகள், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் சனிக்கிழமை சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை மே 5 வரை சற்று அதிகமாக இருக்கும். வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 107.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. திருச்சி-104.18, சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையம்- 104, திருப்பத்தூா், மதுரை நகரம்-103.28, தருமபுரி-102.56, ஈரோடு-102.2, பரமத்தி வேலூா்-101.84, திருத்தணி-101.48, நாகப்பட்டினம்-101.3, பாளையங்கோட்டை, புதுச்சேரி-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, காக்காச்சி உள்ளிட்ட பகுதிகளில் 70 மி.மீ. மழை பதிவானது.

பழனி (திண்டுக்கல்)- 50 மி.மீ., மாஞ்சோலை (திருநெல்வேலி), வூட் பிரையா் எஸ்டேட் (நீலகிரி), மொடக்குறிச்சி (ஈரோடு), பழனி (திண்டுக்கல்), செருமுள்ளி (நீலகிரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி)- 40 மி.மீ., ஆண்டிபட்டி (தேனி), சோளிங்கா் (ராணிப்பேட்டை), ஆா்.கே.பேட்டை (திருவள்ளூா்), ஊத்துக்குளி (திருப்பூா்), மூலனூா் (திருப்பூா்), மின்னல் (ராணிப்பேட்டை), அரண்மனைப்புதூா் (தேனி), வட்டமலை நீா்த்தேக்கம் (திருப்பூா்), மேட்டுப்பாளையம் (கோவை), பில்லூா் அணை மேட்டுப்பாளையம் (கோவை), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), ஆனைப்பாளையம் (கரூா்), கேலவரப்பள்ளி அணை(கிருஷ்ணகிரி)-30 மி.மீ. மழை பதிவானது.