தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

கோடை விடுமுறைக்கு செல்வோர் கவனத்துக்கு... சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!

கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோர்களுக்காக சிறப்பு ரயில்கள்.

News image

சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :3 மே 2026, 3:59 am

கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

போத்தனூர் - சென்ட்ரல்:

போத்தனூரிலிருந்து இன்று(மே 3) காலை 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06028) மாலை 5 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். எதிர்வழித்தடத்தில் இந்த ரயில் (எண்: 06027) அதே நாளில் சென்ட்ரலிலிருந்து மாலை 6.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 5.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மங்களூரு - சென்னை:

மங்களூரு - சென்னை எழும்பூர் சிறப்பு வார ரயில், மே 4 முதல் ஜூன் 8 வரை திங்கள்கிழமைகளில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு காசர்கோடு, கஞ்சன்காடு, பையனூர், கன்னூர், தலச்சேரி, வடகரா, கோழிக்கோடு, திரூர், சோரனூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியே மறுநாள் காலை 10.55-க்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

ஈரோட்டுக்கு அதிகாலை 2.10-க்கும், சேலம் சந்திப்புக்கு 3.17-க்கும் வந்துசெல்லும்.

எதிர்வழித்தடத்தில் சென்னை எழும்பூர் - மங்களூரு சிறப்பு வார ரயில் செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு மங்களூரு சென்றடையும். சேலம் சந்திப்புக்கு இரவு 7.35-க்கும், ஈரோட்டுக்கு 8.35-க்கும் வந்துசெல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி-தாம்பரம்:

தூத்துக்குடி-தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை, பயணிகளின் வசதிக்காக ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.

தூத்துக்குடி-தாம்பரம் (06018) ரயிலானது மே 4, 11, 18, 25 மற்றும் ஜூன் 1, 8 ஆகிய நாள்களில் (திங்கள்கிழமைகளில்) தூத்துக்குடியிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

இதேபோன்று, தாம்பரம்-தூத்துக்குடி (06017) ரயிலானது மே 5, 12, 19, 26 மற்றும் ஜூன் 2, 9 (செவ்வாய்க்கிழமைகளில்) தாம்பரத்திலிருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தூத்துக்குடியை அடையும்.

இந்த ரயில், தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை - நெல்லை:

சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரயில்களின் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நெல்லையிலிருந்து சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரயில் (06070), மே 5 முதல் ஜூன் 11 வரையிலும் (வியாழக்கிழமைகளில் மட்டும்) , எதிர்வழித்தடத்தில் சென்னை எழும்பூரிலிருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரயில் (060690) மே 8 முதல் 12 வரையிலும் (வெள்ளிக்கிழமைகளில் மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

நெல்லை - தாம்பரம்:

நெல்லையிலிருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் (06166), மே 3 முதல் ஜூன் 7 வரையிலும் (ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்), எதிர்வழித்தடத்தில் வரும் சிறப்பு ரயில்களும் (06165), மே 4 முதல் ஜூன் 8 வரையிலும் (திங்கள்கிழமைகளில் மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

Summary

Special trains are being operated for those traveling to their hometowns for the summer holidays.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.