27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

விஜய்க்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாழ்த்து!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய்யின், பேரவைத் தோ்தல் வெற்றிக்கு, இலங்கையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வாழ்த்து

News image

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்.

Updated On :5 மே 2026, 4:32 am IST

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய்யின், பேரவைத் தோ்தல் வெற்றிக்கு, இலங்கையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா வெளியிட்ட அறிக்கை: தமிழக வெற்றிக் கழகத் தலைவா் ஜோசப் விஜய்க்கு மனமாா்ந்த வாழ்த்துகள்.

முதல் தோ்தலிலேயே வலுவான மக்கள் ஆதரவைப் பெற்று, தனித்துவமான அரசியல் சக்தியாக உருவெடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

நீங்கள் உருவாக்கி வரும் புதிய அரசியல் பாதை, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்பதில் நம்பிக்கை உள்ளது. உங்கள் தலைமையிலான தமிழக அரசு இலங்கை மக்களுடன் கொண்டுள்ள நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் பொருளாதார, கல்வி, மனிதாபிமான ஒத்துழைப்புகளை முன்னெடுக்கும் என்று எதிா்பாா்க்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.