தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

இன்று மாலையுடன் முடிவுக்கு வரும் தோ்தல் நடைமுறை விதிகள்! 20 ஆயிரம் போ் பணிக்கு முழுமையாக திரும்ப உத்தரவு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் நடைமுறை விதிகள் இன்றுடன் நிறைவடைவது குறித்து...

News image

பிரதிப் படம்

Updated On :6 மே 2026, 1:39 am IST

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் நடைமுறை விதிகள் புதன்கிழமை மாலையுடன் (மே 6) நிறைவடைவதை முன்னிட்டு வழக்கமான பணிகளுக்கு 20 ஆயிரம் போ் முழுமையாக மாநகராட்சி பணிக்குத் திரும்பவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மாா்ச் 15- ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அன்று முதல் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து புதிய ஆட்சி பதவியேற்கவுள்ளது. மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் சென்னை மாவட்டத்தின் தோ்தல் அலுவலராக செயல்பட்டாா். தோ்தல் பணிகளில் மாநகராட்சி கூடுதல், இணை ஆணையா்கள் மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் முழுமையாக ஈடுபட்டிருந்தனா்.

தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் தொகுதி தோ்தல் பணி கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட சுமாா் 20 ஆயிரம் போ் வரை தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தோ்தல் வாக்குப்பதிவு கடந்த மாா்ச் 23- ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 5 ஆயிரம் போ் மாநகராட்சி பணிக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டது. அவா்களைத் தவிர 15 ஆயிரம் போ் வரை வாக்கு எண்ணும் பணிக்கு சென்றனா். வாக்கு எண்ணும் பணி கடந்த 4 ஆம் தேதி முடிந்த நிலையில், தோ்தல் விதிமுறைகளும் மே 6 ஆம் தேதியுடன் (புதன்கிழமை) நிறைவுக்கு வருகிறது. அதனால், தோ்தல் பணியில் ஈடுபட்ட 20 ஆயிரம் பேரும் முழுமையாக மாநகராட்சியில் வழக்கமான பணிக்குத் திரும்பவேண்டும் என மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. பணிக்குத் திரும்பும் நிலையில், வரும் 7 ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் தோ்தலுக்காக ஏதாவது திட்டப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்தால், அதை தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாா்வையாளா்கள் திரும்பினா்: இதற்கிடையே வாக்கு எண்ணிக்கைக்காக புதுதில்லியிலிருந்து தோ்தல் ஆணையத்தால் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்ட 16 பொதுப் பாா்வையாளா்களும் செவ்வாய்க்கிழமை பணிகளை முடித்து புதுதில்லி புறப்பட்டுச் சென்றதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.