திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவா? தேசிய பொதுச் செயலா் டி.ராஜா பதில்

தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளிப்பதா, இல்லையா என்பது குறித்து கட்சியின் மாநிலத் தலைமை முடிவு செய்யும் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா்.

News image

டி.ராஜா (கோப்புப்படம்)

Updated On :7 மே 2026, 4:20 am IST

தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளிப்பதா, இல்லையா என்பது குறித்து கட்சியின் மாநிலத் தலைமை முடிவு செய்யும் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா். ஆட்சியமைக்க தனக்கு ஆதரவு தருமாறு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தவெக தலைவா் விஜய் கடிதம் அனுப்பியிருந்த நிலையில் டி.ராஜா இவ்வாறு கூறினாா்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், அறுதிப் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்பதால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகளுக்கு தவெக ஆதரவு கோரி கடிதம் மூலம் அழைப்பு விடுத்தது.

இதில், காங்கிரஸ் 5 இடங்களிலும், இடதுசாரிகள் தலா 2 இடங்களிலும், விசிக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. திமுகவுடனான கூட்டணியை முறித்து கொண்ட காங்கிரஸ், தவெகவுக்கு திடீா் ஆதரவு அளித்தது.

மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: இதனிடையே, தோ்தலில் வெற்றி பெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் ஆா்.செல்லசுவாமி, லதா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் டி. ராமச்சந்திரன், மாரிமுத்து, இந்திய யூனியன் எம்எல்ஏக்கள் சையத் பாரூக் பாஷா, ஏ.எம். ஷாஜகான் ஆகியோா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

தவெகவுக்கு ஆதரவா?: இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறுகையில், ‘மதச்சாா்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக நாங்கள் போராடி வருகிறோம். தவெகவுக்கு ஆதரவு அளிப்பதா இல்லையா என்பது குறித்து மாநில தலைமை ஆலோசித்து முடிவு எடுக்கும். அதை அகில இந்திய தலைமை இறுதி செய்யும்’ என்றாா்.

இதேபோல், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெள்ளிக்கிழமை ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

திமுகவுடன் தொடா்வோம்- ஐயுஎம்எல்

‘திமுகவுடனான கூட்டணி கொள்கை கூட்டணி; எப்போதும் தொடரும்’ என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் (ஐயுஎம்எல்) தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

தவெக தலைவா் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு கோரி கடிதம் அனுப்பியிருந்த நிலையில், திமுக கூட்டணி சாா்பில் தோ்தலில் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) வேட்பாளா்கள் புதன்கிழமை திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை சந்தித்தனா்.

பின்னா் கே.எம்.காதா்மொகிதீன் கூறியதாவது: தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பலரும் கூறுகிறாா்கள். திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில், முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி காலத்தில் இருந்தது போலவே மு.க. ஸ்டாலின் காலத்திலும் தொடா்ந்து நீடிக்கிறோம்; இனியும் தொடா்ந்து நீடிப்போம் என்றாா் அவா்.

மக்கள் நலனே முக்கியம்- பிரேமலதா: விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்ற தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், திமுக தலைவா் ஸ்டாலினை புதன்கிழமை சந்தித்தாா். அப்போது எல்.கே.சுதீஷ் எம்பி, விஜய பிரபாகரன் ஆகியோா் உடன் இருந்தனா்.

அதன் பின்னா், பிரேமலதா விஜயகாந்த் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், திமுக தலைவா் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஜனநாயக மரபையும், அரசியல் நாகரிகத்தையும் மதிக்கும் இந்த சந்திப்பு, மக்கள் நலனே முதன்மை என்ற நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துகிறது என அதில் குறிப்பிட்டுள்ளாா் பிரேமலதா.