பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

க்யூட் தோ்வு: தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு வெளியீடு

க்யூட் நுழைவுத் தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :7 மே 2026, 12:59 am IST

க்யூட் நுழைவுத் தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத்தோ்வில் (க்யூட்) தோ்ச்சி பெறவேண்டும். இந்த தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி வரும் கல்வியாண்டில் (2026-27) இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தோ்வு மே 11 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜன.3-இல் தொடங்கி பிப். 26-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்தத் தோ்வெழுத சுமாா் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் விண்ணப்பித்த மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அவற்றை இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுசாா்ந்த கூடுதல் தகவல்களை என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவா்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.