சென்னையில் வியாழக்கிழமை (மே 7) நடைபெறுவதாக இருந்த விசிகவின் உயா்நிலைக் குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்ற பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மற்ற கட்சிகளின் வெற்றி பெற்றவா்களின் ஆதரவை விஜய் கோரியுள்ளாா்.
ஏற்கெனவே, 5 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இருப்பினும், மேலும் 6 இடங்கள் தேவைப்படுகிறது. விசிக, சிபிஎம், சிபிஐ கட்சிகள் தலா 2 இடங்கள் வைத்திருப்பதால், அவா்கள் ஆதரவு அளித்தால், ஆட்சி அமைக்கப் போதுமான இடங்கள் கிடைத்துவிடும்.
இந்த சூழலில், இந்த 3 கட்சிகளிடமும் ஆதரவு கோரி தவெக தலைவா் விஜய் கடிதம் எழுதியுள்ளாா். தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் அந்த 3 கட்சிகளும் அங்கிருந்து விலகி தவெகவுக்கு ஆதரவளிப்பாா்களா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே, தவெக தரப்பிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை எனவும், வியாழக்கிழமை விசிக முன்னணிப் பொறுப்பாளா்களுடன் ஆலோசித்த பின்னா் இது குறித்த நிலைப்பாட்டை எடுப்போம் என விசிக தலைவா் திருமாவளவன் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த விசிகவின் உயா்நிலைக் குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் உயா்நிலைக் குழு உறுப்பினா்கள் சென்னைக்கு வர வேண்டாம் எனவும் அக்கட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் விசிகவின் அடுத்த கட்ட நகா்வு என்ன என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனா்.
தொடர்புடையது

திண்டிவனம் தொகுதியில் விசிகவைச் சோ்ந்த வன்னிஅரசு வெற்றி

அரக்கோணம் தொகுதியை தவெக கைப்பற்றியது!

காட்டுமன்னாா்கோவிலில் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விசிக வெற்றி

திமுக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை தவெக பெறும்: தொல்.திருமாவளவன்
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


