
விஜய்யை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழகத்திற்கு அவமானம்! கமல் ஹாசன்
தவெக தலைவா் விஜய்க்கு ஆதரவாக கமல் ஹாசன் பதிவு...

கோப்புப் படம் - ANI
தவெக தலைவா் விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.
என் சகோதரர் ஸ்டாலின், ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன். இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும்.
233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.
‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆக வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழà¯à®¨à®¾à®à¯ à®à®à¯à®à®®à®©à¯à®±à®¤à¯ தà¯à®°à¯à®¤à®²à®¿à®²à¯ தனிதà¯à®¤à¯ à®à®à¯à®à®¿à®¯à®®à¯à®à¯à®à¯à®®à¯ à®à®¤à®¿à®à®¾à®°à®¤à¯à®¤à¯ à®®à®à¯à®à®³à¯ à®à®¨à¯à®¤à®à¯ à®à®à¯à®à®¿à®à¯à®à¯à®®à¯ வழà®à¯à®à®µà®¿à®²à¯à®²à¯. à®à®¨à¯à®¤ à®®à¯à®à®¿à®µà¯ தமிழà¯à®¨à®¾à®à¯à®à¯ வரலாறà¯à®±à®¿à®²à¯ à®®à¯à®©à¯à®©à¯à®ªà¯à®ªà¯à®¤à¯à®®à¯ நிà®à®´à®¾à®¤à®¤à¯.
— Kamal Haasan (@ikamalhaasan) May 7, 2026
à®à®©à¯ à®à®à¯à®¤à®°à®°à¯ திரà¯. @mkstalin à®à®µà®°à¯à®à®³à¯ âà®®à®à¯à®à®³à¯ தà¯à®°à¯à®ªà¯à®ªà¯ மதிà®à¯à®à®¿à®±à¯à®®à¯; பà¯à®±à¯à®ªà¯à®ªà®¾à®© à®à®¤à®¿à®°à¯à®à¯à®à®à¯à®à®¿à®¯à®¾à®à®à¯ à®à¯à®¯à®²à¯à®ªà®à¯à®µà¯à®®à¯â à®à®©à¯à®±à¯â¦
Summary
Not inviting Vijay to form government is an insult to Tamil Nadu: Kamal Haasan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


தென்னிந்திய சினிமா தனது தூணை இழந்துவிட்டது... பிரசாத் லேப் சிவராமன் மறைவுக்கு கமல் ஹாசன் இரங்கல்!
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்: மு.க. ஸ்டாலின்





