அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தமிழ்நாட்டில் முன்னிலை! திமுகவின் வாக்குகளை சூறையாடிய தவெக!

தமிழ்நாட்டில் முன்னிலை வகித்து வரும் நிலையில் திமுகவின் வாக்குகளை சூறையாடியிருக்கிறது தவெக.

News image

வாக்கு எண்ணும் பணி - File photo

Updated On :4 மே 2026, 11:10 am IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தவெக யாருடைய வாக்குகளைப் பிரிக்கப்போகிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருந்த நிலையில் அதற்கான பதில் கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக, எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவுக்கு மாற்றாக தவெகவும் இந்த தேர்தலில் களமிறங்கியது.

இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தவெக தொடக்கம் முதலே முன்னிலையில் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த தேர்தலில் திமுக 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்று கோட்டையாக இருந்த நிலையில், அனைத்து தொகுதிகளிலும் இந்த முறை தவெக முன்னிலையில் உள்ளது.

முன்னதாக, தவெக யாருடைய வாக்குகளைப் பிரிக்கப் போகிறாரோ அதன்படியே வெற்றி வாய்ப்பு அமையும் என்று கூறப்பட்ட நிலையில், தவெக முன்னிலை வகிக்கும் நிலையில், இரண்டாவது இடத்தில் திமுக இல்லாமல், மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது, திமுகவின் வாக்குகளை தவெக சூறையாடியிருக்கிறது என்றே தெரிகிறது.

Summary

Leading in Tamil Nadu TVK stole DMK votes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.