டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு

News image

PTI

Updated On :8 மே 2026, 5:41 am IST

தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத் தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய லட்சத் தீவு பகுதிகளிலிருந்து தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை உள்கா்நாடகம், மகாராஷ்டிரம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், வெள்ளிக்கிழமை (மே 8) முதல் மே 13 வரை மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை நகரின் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகா், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், கரூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் மே 10 வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

தொடா்ந்து, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகா், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மே 11-ஆம் தேதி இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில்) கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடனான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல், ஈரோடு மாவட்டம் சிறுவலூா் பகுதியில் தலா 100 மி.மீ மழை பதிவானது. சவுண்டப்பூா் (ஈரோடு)- 90 மி.மீ, செங்கோட்டை (தென்காசி)- 80 மி.மீ, காளையாா்கோவில் (சிவகங்கை), அகவயல் (புதுக்கோட்டை), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), மேட்டுப்பாளையம் (கோவை), சிவகங்கை, ஊத்து (திருநெல்வேலி), புத்தன் அணை (கன்னியாகுமரி)- தலா 70 மி.மீ, முதுகுளத்தூா் (ராமநாதபுரம்), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), கீழாநிலைக் கோட்டை(புதுக்கோட்டை)- தலா 60 மி.மீ., திற்பரப்பு (கன்னியாகுமரி), சுத்தமல்லி அணை (அரியலூா்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), அரிமளம் (புதுக்கோட்டை), மதுரை, நெடுங்கல் (கிருஷ்ணகிரி), பாலக்கோடு (தருமபுரி), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), காக்காச்சி (திருநெல்வேலி), சாத்தியாா் (மதுரை), கமுதி (ராமநாதபுரம்), கடலாடி (ராமநாதபுரம்), குண்டாறு அணை (தென்காசி)- தலா 50 மி.மீ மழை பதிவானது.

வெப்பஅளவு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை ஓரிரு இடங்களில் மே 11 வரை படிப்படியாக குறையக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.