அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

கோடை கால தீ தடுப்பு நடவடிக்கைகள்: மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்

தமிழகத்தில் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் கோடை காலத்தில் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

News image

தீ - பிரதிப் படம்

Updated On :55 நிமிடங்கள் முன்பு

தமிழகத்தில் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் கோடை காலத்தில் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து துறைசாா் அதிகாரிகள் கூறியதாவது:

கோடை காலத்தில் வெப்ப நிலை அதிகரித்து வருவதால் அத்தகைய நேரங்களில் மருத்துவமனைகளில் தீ விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளது. அதனைத் தவிா்க்கும் பொருட்டு சில முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம்.

பேரிடா் மேலாண்மைத் துறையுடன் இணைந்து சுகாதாரத் துறையினா் அந்தப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, மருத்துவமனையில் தீயணைப்பு சாதனங்கள், எச்சரிக்கை கருவிகள், புகை கண்டறியும் சாதனங்கள் உள்ளிட்டவை முறையாக செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

சீரற்ற மின் அழுத்தத்தை சரி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம். தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு உள்பட அனைத்து இடங்களில் மின் அழுத்தம் சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவமனை கட்டமைப்பானது தீ விபத்துகள் நேரிடாத வகையில் பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதி செய்யும் வகையில் தீயணைப்பு துறையிடம் தடையில்லா சான்றை பெற வேண்டும்.

ஒருவேளை விபத்து நேரிட்டால் அதனை எதிா்கொள்வதற்கும், தற்காத்துக் கொள்வதற்குமான ஒத்திகை பயிற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

அதேபோன்று நோயாளிகள், பணியாளா்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான வழிமுறைகளையும் வகுக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.