தமிழகத்தின் முதல்வராக விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவர், “தினமும் ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டியது அவசியம்” என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 108 தொகுதிகளில் வென்ற பிறகும், தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தவெக ஆட்சி அமைக்க முடியாமல் பிற கட்சிகளின் ஆதரவை நாடியது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவளித்ததை அடுத்து, இன்று (மே 10) தெவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்றார்.
இதுகுறித்து ஷெஸாத் பூனாவாலா தெரிவித்ததாவது:
”இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழக மக்களுக்கும், தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு முன்னால் ஒரு மாபெரும் சவாலான பணி காத்திருக்கிறது.
எனவே, திரையுலகைப் போலல்லாமல், இங்கு அவர் தினமும் ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டியது அவசியம். தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி, விஜய் ஒரு நிலையான அரசை அவர்களுக்கு வழங்குவார் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
Summary
Following Vijay's assumption of office as the Chief Minister of Tamil Nadu, BJP National Spokesperson Shehzad Poonawalla has stated, "It is essential to deliver a 'hit film' every day."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்கள் ஆலோசனை! விரைவில் புதிய நிர்வாகிகள்!
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமாகா விலகல்: ஜி.கே. வாசன் அறிவிப்பு

தமிழ்நாடு முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்..?
முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech




